என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்பனா சாவ்லா விருது"
- சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தார்.
- மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது வழங்க உள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக செவிலியர் சபீனாவுக்கு, வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர் சபீனாவுக்கு, விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்க உள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்தமைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு நல்ஆளுமை விருது வழங்கப்பட்டது.
- சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது-கன்னியாகுமரி மாவட்டம் சாந்தி நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
சென்னை:
சென்னையில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
தமிழ்நாட்டுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியதற்காக 2023-ம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கி.வீரமணிக்கு வழங்கினார்.
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் முனைவர் டபிள்யூ. பி.வசந்தா கந்தசாமிக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. அறிவியல் ஆராய்ச்சி துறையில் அவரது சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நா.முத்தமிழ்செல்விக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்ற முத்தமிழ்செல்வி ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். இவர் நேபாளத்தில் அமைந்துள்ள லொபுட்சே சிகரத்தை ஏறியுள்ளார். மேலும் இமாச்சலபிரதேசம் லடாக்கில் உள்ள "கங்கியாட்சே" மலையில் ஏறியுள்ளார். அத்துடன் 26.1.2022 அன்று வீரமங்கை வேலுநாச்சியாரை நினைவு கூறும் விதமாக சென்னை வண்டலூர், மண்ணிவாக்கம் அரசு பள்ளி மைதானத்தில் வேலு நாச்சியார் அவதாரமேற்று, குதிரை மீது அமர்ந்து சுமார் 3 மணி நேரம் 1,389 அம்புகள் எய்து 87 சதவீத புள்ளிகள் பெற்று சாதனை செய்துள்ளார்.
முத்தமிழ்செல்வி இமாச்சலபிரதேசம், குலாங்க் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் இருந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்க்கும் வகையிலும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் 2-வது மகள் வித்திஷா (வயது9)வை தன் முதுகில் கட்டிக் கொண்டு, மூத்த மகள் தக்ஷாவை (வயது13) உடன் அழைத்துக் கொண்டு கண்களை கட்டிக் கொண்டு 165 அடி உயரத்தில் இருந்து 55 வினாடிகளில் இறங்கி சாதனை செய்துள்ளார்.
மேலும் இவர் மகளிர் தினத்தன்று பெண்களை ஊக்கப்படுத்தவும் பெண்கள் சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்த தவறும் ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 155 அடி உயர மலைப்பட்டு மலையின் உச்சியில் இருந்து 58 வினாடிகளில் கண்களை கட்டிக்கொண்டு இறங்கி சாதனை செய்துள்ளார்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு நல்ஆளுமை விருது வழங்கப்பட்டது.
ஆதரவற்ற நோயாளிகளுக்கான உரிய சிகிச்சை மேற்கொண்ட சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணிராஜனுக்கும் விருது வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்ததற்காக சென்னை டாக்டர் செல்வ குமாருக்கு சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது-கன்னியாகுமரி மாவட்டம் சாந்தி நிலையத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் விருது கோவை மாவட்டம் மயிலேரிபாளையம் உதவும் கரங்கள் நிறுவனத்தை சேர்ந்த ரத்தன் வித்யாகருக்கு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்ததற்காக மதுரையை சேர்ந்த டெடி எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சிறந்த தனியார் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி அளிப்பதில் முன்னணியில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேவையினை பாராட்டி சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டான்லி பீட்டருக்கு மகளிர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த கிராமத்தின் ஒளி என்ற நிறுவனத்தின் சமூக சேவையை பாராட்டி சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டது.
ஆண்கள் பிரிவில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கோ.கோபி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ராஜ சேகர் (சாகச விளையாட்டு) மற்றும் பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த சந்திரலேகா, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கவிதா தாந்தோணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க சிறப்பாக பணியாற்றிய தெற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றிய அஸ்ராகார்க் (வடசென்னை கூடுதல் கமிஷனர்) கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஆகியோருக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு டோங்கரே பிரவின் உமேஷ், கோவை மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் குணசேகரன், நாமக்கல் மாவட்ட போலீஸ் உதவி ஆய்வாளர் முருகன், புதுச்சத்திரம் போலீஸ் ஏட்டு குமார் ஆகியோருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
- சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும்.
- இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப
தாவது:-
2023 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர தீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.
இவ்விருது தொடர்பாக இணையதள முகவரியான https://awards.tn.gov. in- ல் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது ஆப் லைனில் இருந்தால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லார் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு, சென்னை-600 003. எனும் முகவரிக்கு தபால் மூலமாக எதிர்வரும் வரும் 28-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-235633 என்ற தொலைபேசி எண்ணிலும், 7401703496 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும்.
- உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும் முதல்- அமைச்சரால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்ப தாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர் ஆவர்.
இந்த விருதுக்கு தென்காசி மாவட்டத்தை சார்ந்த துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான வர்களுக்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன.
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது க்கான விண்ணப்பங்கள் / பரிந்து ரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இணைய தளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கி யதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகப்ட்சம் 800 வார்த்தை களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவர ங்களும் முறையாக நிரப்பப்படு வதை உறுதி செய்ய வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பி ப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இணைய தளத்தில் பெற ப்படும் விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்ப ங்கள் கண்டி ப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2023ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கவுள்ளார்.
- வருகிற 30ந் தேதிக்குள் http://awards.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர்:
கல்பனா சாவ்லா விருது பெற விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- விளையாட்டில் சாதனை புரிந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு 2023ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கவுள்ளார். தமிழகத்தை சேர்ந்த விளையாட்டில் சாதனை புரிந்த பெண்கள் அதற்கான சான்றுகளுடன் வருகிற 30ந் தேதிக்குள் http://awards.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடிதம் வாயிலாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் வருகிற 28ந்தேதிக்குள், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வீர, தீர செயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது
- சமுதாயத்தில் துணிச்சலான தைரியமிக்கசாதனை புரிந்த பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் துணிச்சலான தைரியமிக்கசாதனை புரிந்த பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் உரிய சாதனை சான்று களுடன் விண்ண ப்பங்களை வருகிற 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டது.
- நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கு சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக விருது வழங்கப்பட்டது.
சென்னை:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மேல்வீதியை சேர்ந்த பா.எழிலரசி தனக்கு நீச்சல் தெரியாதிருந்த போதிலும் 2 குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.
கும்பகோணம் மற்றும் அம்மாள் சத்திரத்தை சேர்ந்த 2 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பாட்டியின் சடங்குக்காக தாத்தா வீட்டுக்கு வந்திருந்தனர். 3 குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடிக் கொண்டிருக்கும்போது 3 குழந்தைகளில் இருவர் தவறுதலாக அருகில் உள்ள குளத்தில் விழுந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுவர்கள் கதறிய சத்தம் கேட்டு கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மேல்வீதி கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசி தனக்கு நீச்சல் தெரியாதிருந்தும் நீரில் மூழ்கிய குழந்தைகளைக் கண்டு அவர்களை மீட்கும் முயற்சியில் குளத்தில் இறங்கி கை கொடுத்து தன்னிச்சையாக செயல்பட்டபோது ஒரு கட்டத்தில் அவரும் குளத்தில் விழுந்துள்ளார்.
இருந்த போதிலும் 2 குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு வெகுநேரம் குளத்தில் மன உறுதியுடன் போராடினார். பின்பு அங்கு வந்த பொதுமக்களின் உதவியுடன் 3 பேரும் சிறிய காயங்களுடன் வெளியே வந்தனர்.
எழிலரசியின் வீரமான துணிவான செயலை பாராட்டும் விதமாக அவருக்கு 2022-ம் வருடத்திற்கான துணிவு மற்றும் வீர சாகச செயலுக்கான 'கல்பனா சாவ்லா' விருதை அரசு வழங்கி சிறப்பித்திருக்கிறது.
உங்கள் தொகுதியில் முதல்வர் விருது எஸ்.லட்சுமி பிரியாவுக்கு வழங்கப்பட்டது. லட்சுமி பிரியா முதல்வரின் முகவரித் துறையில் துணை ஆட்சியராகவும் பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலராகவும் பணியாற்றி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கற்சூளைகளில் கொத்தடிமை தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்களை மீட்டெடுத்து தொழில் முனைவோராக மாற்றி உள்ளதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் பெறும் வகையில் 'சிறகுகள்-செங்கல்கள்' திட்டத்தை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதற்காக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் பின்தங்கியவர்களாக உள்ள திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து நிலையான வளர்ச்சி இலக்கை அடைய எடுக்கப்பட்ட முன் முயற்சிக்காக செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரை 3 அடுக்குகளாக சுத்திகரித்து தரைமட்ட தொட்டியில் சேமித்து பல்வேறு வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துவதோடு மிகை மழை நீரை அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் உறிஞ்சு குழியின் மூலம் நிலத்தடியில் செல்லுமாறு கட்டமைப்புகளை வடிவமைத்து நிலத்தடி நீர் மட்டம் உயர செய்தமைக்காக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட நீர்பிடி மேலாண்மை முகமையில் இருந்த விவசாயிகளின் பங்களிப்பு தொகையான ரூ.4.5 கோடியில் 20 ஜே.சி.பி. எந்திரங்கள் வாங்கப்பட்டு நீர்நிலைகளை தூர்வாரி, அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுத்து ஏழை விவசாயிகளின் நிலங்களில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி விவசாயம் செய்யப்படாமல் இருந்த நிலங்களை விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததன் மூலம் நீர் நிலைகள் மற்றும் அரசு நிலங்கள் மீட்டெடுத்தலுக்காக சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கருவுற்ற தாய்மார்களின் உடல்நலனை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து அவர்களுக்கு தேவையான தரமான மற்றும் முழுமையான மருத்துவத்தை அளிக்க உதவும் வகையில் தாய் கேர் நெல்லை என்ற திட்டம் பொது சுகாதார அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு பேறுகால இறப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டமைக்காக அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
தமிழக விவசாயிகள் தேவையான நவீன கருவிகளுடன் கூடிய வேளாண் எந்திரங்களை எளிதாக வாடகை முறையில் பெற இணைய வழியில் பணம் செலுத்தி முன்பதிவு செய்ய ஏதுவாக இ-வாடகை கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலில் வேளாண் எந்திரமயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடையே உருவாக்கி உள்ளதோடு அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன் அடைந்ததை பாராட்டி தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறைக்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் காப்பகங்களில் வைத்து பராமரித்தும், உரிய முகவரி கண்டறிந்து குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்படுவதோடு உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செயப்படுகின்றது. சென்னை பெருநகர காவல் துறையின் இச்சீரிய முயற்சியினை பாராட்டும் வகையில் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டது. அதனை மேயர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டது. 2-வது பரிசு குடியாத்தம் நகராட்சிக்கும், 3-ம் பரிசு தென்காசி நகராட்சிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிக்கு ரூ.10 லட்சமும், 2-ம் பரிசு கன்னியாகுமரிக்கு ரூ.5 லட்சமும், 3-ம் பரிசு சோழவந்தானுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டது.
ஆண்கள் பிரிவில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மரு.பெ.விஜயகுமாருக்கு சமுதாயத்திற்கு இவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. உக்ரைன் நாட்டில் நடந்த போரின்போது தமிழகத்தை சேர்ந்த 35 மாணவர்களுக்கு அரசுடன் இணைந்து போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து அவர்களை மீட்க உதவினார்.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மு.முகமது ஆசிக் என்பவர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய உதவியதற்காக விருது வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு காடு வளர்ப்பு பணியில் ஈடுபட்டதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்த குடியாத்தம் உள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட பாலாறு ஆற்றுப்படுகையில் 25 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் காடு வளர்க்கும் பணியை தொடங்கினார். மேலும் தனது சொந்த ஊரில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டு பராமரித்தும் வருகிறார்.
நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கு சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக விருது வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர் பா.ஜெய் கணேஷ் மூர்த்தியை பாராட்டி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையை சேர்ந்த ரெனோசான்ஸ் அறக்கட்டளை 30 ஆண்டுகளாக அறிவுசார் குறை உடையவர்களுக்கான சிறப்பு பள்ளி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
மாவட்ட அளவிலான சிறப்பு ஒலிம்பிக் நடத்திய தடகள போட்டிகளில் 26 பதக்கங்களை பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. எனவே மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு பணிக்கான நீண்டகால சேவை செய்துவரும் இந்நிறுவனத்திற்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது.
- தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழக அரசின் சார்பில் பல் வேறு துறைகளில் மற்றும் சமூ கத்தில் வீரத்துடனும் , துணிச்ச லுடனும் சாதனை செயல்கள் புரிந்த பெண்களுக்கு ' கல் பனா சாவ்லா ' விருது வழங் கப்பட்டு வருகிறது . அதன்படி 2022 - ம் ஆண்டுக்கான கல் பனா சாவ்லா விருது கான விண்ணப்பங்கள் ராணிப் பேட்டை மாவட்டத்தில் வர வேற்கப்படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண் ணப்பம் என குறிப்பிட்டுவிண் ணப்பத்தை அனுப்ப வேண் டும் .
இதற்கான விவரங்களை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வும் , பூர்த்தி செய்த விண்ணப் பங்களை அசலாக தபால் வாயிலாகவும் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம் , நேரு விளையாட்டு அரங் கம் , பெரியமேடு , சென்னை -3 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் சேரும்படி அனுப்ப வேண்டும் .
கூடுதல் விவரங்களுக்குமாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 0416-2221721 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார் .
- சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
- வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேனி:
கல்பனாசாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டு–க்கான கல்பனாசாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில், துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்குரிய இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ண–ப்பித்து, பயனடையுமாறு தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
- தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண்கள், இவ்விருதினை பெற தகுதியுடையவராவர். இயற்கை பேரழிவுகள், விபத்துகள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ தொடர்பான சம்பவங்கள், துணிச்சலான முயற்சிகள் ஆகியவற்றின்போது பல தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகச சம்பவங்கள் தொடர்பாக இவ்விருது வழங்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான கல்பான சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான "கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.
இந்த விருதுடன் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் ஒரு பதக்கமும் வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.
2022 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள் விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.
மேலும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்